search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரான்ஸ் முன்னாள் அதிபர்"

    பிரதமரின் நேரடி தலையீட்டுல் செய்யப்பட்ட ரபேல் போர் விமான ஒப்பந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை என இ.கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா வலியுறுத்தியுள்ளார். #Rafaledeal #DRaja
    சென்னை:

    சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இ.கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா கூறியதாவது:-

    ரபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி நேரடியாகவே தலையிட்டு இருந்தார். இதில் ரிலையன்ஸ் நிறுவனத்தை நுழைத்த அதே வேளையில் இந்திய அரசுக்கு சொந்தமான ஹெச்.ஏ.எல். நிறுவனம் நிராகரிக்கப்பட்டது ஏன்? என்பது தான் இவ்விவகாரத்தில் எழும் அடிப்படை கேள்வியாக உள்ளது.

    இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதிலை அறிய மக்கள் விரும்புகிறார்கள். நிதி மந்திரி அருண் ஜெட்லி, ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு பதிலாக இதில் நேரடி தொடர்புள்ள மோடிதான் விளக்கம் அளிக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    ஆனால், இந்த அரசு எதையோ மறைக்கிறது என்பதைதான் பிரதமர் சாதித்து வரும் மவுனம் உறுதிப்படுத்துகிறது. எனவே, ரபேல் ஊழலில் மறைந்திருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்க பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Rafaledeal #DRaja
    ரபேல் போர் விமான ஊழலில் பிரதமர் மோடி குற்றவாளி என்று குற்றம்சாட்டியுள்ள ராகுல் காந்தி இதுதொடர்பான விசாரணைக்கு பிரான்ஸ் முன்னாள் அதிபரை அழைக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். #rahulgandhi #Hollande #pmmodi #rafaledeal
    புதுடெல்லி:

    இந்திய விமானப்படைக்கு பிரான்சிடம் இருந்து 36 ரபேல் ரக விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. ரூ.58 ஆயிரம் கோடிக்கு இந்த விமானங்கள் வாங்கப்படுகின்றன.

    ரபேல் விமானங்களை வாங்க காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே ஒப்பந்தம் போடப்பட்டது. பின்னர் அந்த ஒப்பந்த்தை மாற்றி அமைத்து கடந்த 2015-ம் ஆண்டில் பாரதிய ஜனதா ஆட்சியில் புதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

    பிரான்ஸ் நாட்டில் இருந்து வாங்கப்படும் போர் விமானங்களை பராமரிக்கும் பொறுப்பை இந்திய அரசுக்கு சொந்தமான எச்.ஏ.எல். நிறுவனத்துக்கு வழங்காமல் விமானத்துறையில் முன் அனுபவம் இல்லாத அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழுமத்துக்கு அளிக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது,

    மேலும், அதிக தொகை கொடுத்து விமானத்தை வாங்க ஒப்பந்தம் செய்திருப்பதாகவும், இதில் ஊழல் நடந்திருப்பதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. 

    இதற்கிடையே, பேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் அம்பானி நிறுவனத்தை நுழைத்தது இந்திய அரசின் நிர்பந்ததால்தான் என பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலன்டே நேற்று குறிப்பிட்டிருந்தார். 

    இந்நிலையில், டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ரபேல் போர் விமான ஊழலில் பிரதமர் மோடி குற்றவாளி என்று குற்றம்சாட்டியுள்ளார்.

    இந்த ஒப்பந்தம் மாற்றப்பட்ட போது தனக்கு எதுவும் தெரியாது என முன்னாள் ராணுவ மத்திய மந்திரி மனோகர் பாரிக்கர் கூறுகிறார். ஒப்பந்தத்தின் போது அவர் கோவா மார்க்கெட்டில் மீன் வாங்கி கொண்டு இருந்தாரா?

    ராணுவத்துறையில் நடைபெற்ற இந்த ஊழலில் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள ராகுல் காந்தி, இவ்விவகாரத்தில் பிரதமர் ஊழல்வாதி என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இதற்கு அவர் விளக்கம் அளிக்க வேண்டும்.


    மோடியை காப்பாற்றுவதற்காகவே இந்த ஊழல் தொடர்பாக ராணுவ மந்திரிகள் பொய் தகவல்களை அளித்து வந்தனர் என்பது தெளிவாக புரிகிறது.

    இந்த ஊழல் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும். தேவைப்பட்டால்  இந்த விசாரணைக்கு பிரான்ஸ் முன்னாள் அதிபரை அழைக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். #rahulgandhi #Hollande #pmmodi #rafaledeal
    ×